தைப்பூச தெப்பம்: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர தைப்பூச தெப்பத் திருவிழாவுக்கான தெப்பம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

தெப்பத்தை தாங்கி மிதக்க வைக்கும் காலி டிரம்களின் லாரி லோடு கோவில் குளத்தையொட்டி ஒரு தெருவில் இறக்கப்பட்டது.

விரைவில், குளத்தின் கிழக்கு ஓரத்தில் தெப்பம் கட்டும் பணியை தொழிலாளர்கள் தொடங்குவார்கள்.

தெப்பம் பிப்ரவரி 5 முதல் 7 வரை நடைபெறவுள்ளது.