மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் மாதா கொடியை மீனவர்கள் மெரினா கடற்கரை தெற்குப்பகுதியிலிருந்து படகில் எடுத்து வந்து பாதிரியாரின் பிரார்த்தனைக்கு பின் டூமிங் குப்பதிலுள்ள சிறிய தேவாலயத்தின் கொடிக்கம்பத்தில் ஏற்றினர்.
படகு மூலம் கொடியை எடுத்துச் செல்லும் பாரம்பரியம் பழமையானது என்று இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த விழா வருடாவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.
நாகப்பட்டினத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவானது ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு இங்கு வசிக்கும் மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால் டூமிங்குப்பத்தில் முன்கூட்டியே மாதா திருவிழா நடத்தப்படுகிறது.
டூமிங்குப்பத்தில் நடைபெறும் இந்த திருவிழா எட்டு நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருநாள் மாலையும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…