டூமிங்குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாப்பூர் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங் குப்பத்தில் வருடாந்திர அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெகு விமர்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் மாதா கொடியை மீனவர்கள் மெரினா கடற்கரை தெற்குப்பகுதியிலிருந்து படகில் எடுத்து வந்து பாதிரியாரின் பிரார்த்தனைக்கு பின் டூமிங் குப்பதிலுள்ள சிறிய தேவாலயத்தின் கொடிக்கம்பத்தில் ஏற்றினர்.

படகு மூலம் கொடியை எடுத்துச் செல்லும் பாரம்பரியம் பழமையானது என்று இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த விழா வருடாவருடம் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.

நாகப்பட்டினத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவானது ஆண்டுதோறும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு இங்கு வசிக்கும் மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால் டூமிங்குப்பத்தில் முன்கூட்டியே மாதா திருவிழா நடத்தப்படுகிறது.

டூமிங்குப்பத்தில் நடைபெறும் இந்த திருவிழா எட்டு நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருநாள் மாலையும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.

Verified by ExactMetrics