ஆர்.கே நகர்வாசிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டி எம்.எல்.ஏ விடம் முறையீடு.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு சமீபத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆர்.கே நகருக்கு ஆய்வுக்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளை அவரிடம் எடுத்துரைத்தனர். அதில் முக்கியமாக இந்த பகுதியில் அடிக்கடி மின் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதை சரிசெய்து தரவேண்டும், சாலைகளில் பாழடைந்துள்ள மின்பெட்டிகளை சரி செய்து கொடுத்தல், ஆட்டோமொபைல் ரிப்பேர் கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளவர்களை அகற்றுவது, மற்றும் வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து சாலையை ஆக்கிரமித்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Verified by ExactMetrics