அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது தங்களுடைய வழக்கமான பணியை மேற்கொள்கிறது.

சென்னை மாநகராட்சி கொரோனா சம்பந்தமான வேலைகளை நமது பகுதியில் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். பீமண்ண பேட்டையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. இங்குதான் இப்போது கொரோனா தடுப்பூசி போடுவது மற்றும் இதர கொரோனா சம்பந்தமான பணிகள் நடைபெறுகிறது. இது தவிர சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையங்களில் வழக்கமான பணிகளான கர்ப்பிணிகளுக்கு மருந்து வழங்குதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இப்போது கொரோனா தடுப்பூசி நீங்கள் செலுத்தவேண்டும் என்றால் பீமண்ணப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். தற்போது இங்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.