உங்கள் வீட்டருகே உள்ள சாலை சரியான முறையில் போடப்படுகிறதா? விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பகுதியில் மாநகராட்சியின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றால், சாலை போடும் ஒப்பந்ததாரர் பழைய சாலையை சுமார் 4 செ.மீ அளவுக்கு சுரண்டி எடுக்க வேண்டும், அதன் பின்னரே புதியதாக சாலை அமைக்க வேண்டும். தற்போது மந்தைவெளிபாக்கத்தில் பெரும்பாலான சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மந்தைவெளிப்பாக்கத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் சி.ஆர்.பாலாஜி இது போன்ற சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இவர் தற்போது உள்ளூர் பகுதிகளில் நடக்கும் சாலை பணிகளை பார்வையிட்டு சாலை சரியாக 4செ.மீ உயரத்திற்கு வெட்டியெடுக்கப்பட்டு போடப்படுகிறதா என்று ஆய்வுசெய்கிறார். மேலும் இந்த அளவுப்படி போடாத சாலைகள் சம்பந்தமாக மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளரிடம் தெரிவிக்கிறார்.

உங்கள் பகுதிகளில் இதுபோன்று சென்னை மாநகராட்சியால் சாலை பணிகள் நடைபெற்றால் நீங்கள் அங்கு சென்று இந்த அளவீட்டு முறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெறுகிறதா என்று உறுதிபடுத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் சாலை உயரமாக அமைந்துவிடும், அவ்வாறு அமைந்தால் மழைக்காலங்களில் சாலைகளில் பொழியும் மழை நீர் வீட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டும் சிலர் தங்களுடைய வாகனங்களை சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக சாலைகளிலேயே நிறுத்தியிருகின்றனர், அவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Verified by ExactMetrics