மயிலாப்பூர் கோவில்களில் எம்.எல்.ஏ ஆய்வு பணி

மயிலாப்பூர் கோவில்களின் உட்புறத்திலும் வெளியிலும் கடந்த வாரம் தூய்மை பணிகள் மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ தா.வேலு கடந்த வாரம் பெரும்பாலான கோவில்களை ஆய்வு செய்தார். கோவில்களில் தூய்மை பணிகள் சிறப்பாக இருந்ததாகவும், அதே நேரத்தில் சில கோவில்களின் உட்புறத்தில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் இது சம்பந்தமாக திட்டங்கள் வகுக்கப்பட்டு விரைவில் சரிசெய்யப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Verified by ExactMetrics