திங்கட்கிழமை முதல் நாகேஸ்வர ராவ் பூங்கா காலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.

மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகன்கள் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, நாகேஸ்வர ராவ் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகப்படுத்த எம்.எல்.ஏ விடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று எம்.எல்.ஏ இந்த வாரம் திங்கட்கிழமை முதல் மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வர ராவ் பூங்கா காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க ஏற்பாடு செய்துள்ளார். பொதுமக்கள் மேற்கண்ட நேரத்தில் பூங்காவை பயன்படுத்தலாம். என்று எம்.எல்.ஏ அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பூங்கா காலை 9 மணி வரை மட்டுமே திறந்திருந்தது.

Verified by ExactMetrics