மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவிலில் திரு கல்யாண வைபவம்

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபை மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ‘திரு கல்யாண வைபவம்’ நிகழ்ச்சியை சனிக்கிழமை (மே 28ல்) நடத்துகிறது.

காலை 10.30 மணிக்கு தொடங்கி, வெங்கடேச பெருமாள் (மூலவர் மற்றும் உற்சவர்) மற்றும் தாயார் (உற்சவர்) ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

மாலை, 5 மணிக்கு சஹஸ்ரநாம பாராயணம் துவங்கி, 6.30 மணிக்கு ‘திரு கல்யாண வைபவம்’ நடக்கிறது.

– இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், கோப்பு புகைப்படம்
– செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics