இந்த A1 சிப்ஸ் ஸ்டோரில் பலவிதமான சிப்ஸ், சேவரிஸ் மற்றும் ஊறுகாய்களும் கிடைக்கின்றது.

பிரபலமான ஏ1 சிப்ஸ், சேவரிஸ் மற்றும் ஸ்வீட்ஸ் கடை முசிறி சுப்பிரமணியம் சாலையில் சில காலமாக விற்பனை நிலையத்தைக் கொண்டுள்ளது.

வாழைப்பழத்தில் இருந்து மலபார் மசாலா, சில்லி மசாலா, பலாப்பழம், அல்ட்ரா தின் வெரைட்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும்,ஸ்னாக்ஸ் – மரவள்ளிக்கிழங்கு பக்கோடா, கறிவேப்பிலை பக்கோடா, சபுதானா தட்டை மற்றும் கடலை தின்பண்டங்கள் உள்ளன. எள் உருண்டையும் உண்டு.

முருக்கு, மிக்ஸர், இனிப்பு மற்றும் ஊறுகாய் வகைகளும் விற்பனைக்கு உள்ளன.

முகவரி: 23A, முசிறி சுப்ரமணியம் சாலை, இசபெல்ஸ் மருத்துவமனை பிரதான வாயில் அருகில், மயிலாப்பூர்.

செய்தி, புகைப்படம்: வி.சௌந்தரராணி