இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும் கிண்ணங்களை ஆங்காங்கே வைக்கிறார்கள்.

அத்தகைய ஆர்வலர்களில் ஒருவர் பிரபலமான கைவினைஞரான மந்தைவெளியைச் சேர்ந்த விஜயலட்சுமி ஆவார்.

புளூ கிராஸ் நிறுவனத்திடம் இருந்து சில தண்ணீர் கிண்ணங்களை வாங்கி மந்தைவெளி – மயிலாப்பூர் பகுதியில் ஐந்து இடங்களில் வைத்துள்ளார். ஒரு இடம் திருமயிலை எம்.ஆர்.டி.எஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ளது. அந்த மண்டலத்தில் பல தெரு நாய்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். இங்கு தண்ணீர் பாத்திரத்தை வைத்த பிறகு, நாய்கள் மட்டுமல்ல, தண்ணீர் குடிக்க ஆடுகளும் கூட வருவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதிய நேரத்திற்கு முன்பு கிண்ணத்தை நிரப்பினால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று விஜயலட்சுமி கூறுகிறார்.

புளூ கிராஸில் இருந்து தான் வாங்கும் தண்ணீர் கிண்ணங்களை விரும்புபவர்களுக்கு கொடுத்து உதவ முடியும் என்றும் அவர் கூறுகிறார். ஒவ்வொரு கிண்ணமும் சுமார் ரூ.130 மற்றும் சுமார் 7 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீரை ஊற்றிவைக்கலாம்.

நீங்கள் விஜயலட்சுமியை 9841979307 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Verified by ExactMetrics