தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே சாலையில் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மாட வீதியிலிருந்து வரும் வாகனங்களாலும், வெங்கடேச அக்ரகாரம் தெருவில் இருந்து வரும் வாகனங்களாலும் மற்றும் ஆர்.கே. மட சாலையில் இருபுறமும் வரும் வாகனங்களாலும் இந்த இடத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள், இந்த இடத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் முழு நேரமும் இங்கு பணி செய்து போக்குவரத்தை சரி செய்ய விரும்புகின்றனர். இங்கு சில நேரம் மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு வரையிலும் மற்றும் லஸ் சந்திப்பு வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.