வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்.

வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயலின் தாக்குதலின் போது அக்கம் பக்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தது.

அபிராமபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம் மற்றும் மந்தைவெளி மற்ற எல்லா தெருக்களிலும் இன்று காலை சாய்ந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகள் காட்சியளிக்கின்றன.

வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க குடிமைப் பணியாளர்கள் கடினமாக உழைத்தனர். மேலும், தெரு ஓரங்களில் மரக்கிளைகளின் கழிவுகள் அகற்றப்பட்டன.