வைகுண்ட ஏகாதசி விழா: மக்கள் பங்கேற்க அனுமதிக்கும் நேர விவரங்கள்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் கருடசேவை ஊர்வலம் நடைபெறும். எளிதாக தரிசனம் செய்யவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கோயில் நாள் முழுவதும் திறந்தே இருக்கும். மாலையில் ஆண்டாள் திரு கல்யாண உற்சவம் நடைபெறும். ஸ்ரீநிவாசப் பெருமாள், நம்மாழ்வார், ஆண்டாள் இணைந்த தேரோட்டம் நடைபெறும்.

ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில், ஜனவரி 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் கோவில் நடை திறக்கப்படும், என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics