ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் ஜனவரி.17ல் ஆரம்பம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா ஜனவரி 17 முதல் 19 வரை மாலையில் நடைபெறவுள்ளது.

ஆனால் கொரோனா விதிமுறைகள் காரணமாக, தற்போதைய நிலவரப்படி, மக்கள் விழாவில் பங்கேற்கவும் மற்றும் குளத்திற்குள் செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தெப்பம் (மிதவை) கட்டும் பணி நேற்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெப்பம் சிரமமின்றி நகரும் அளவுக்கு குளத்தில் தண்ணீர் உள்ளது.

Verified by ExactMetrics