இந்த வார இறுதியில் மே 13, 14ல் ஆர்.ஏ.புரத்தில் குப்பை சேகரிப்பு முகாம். பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ், உடைகள், பொம்மைகளை வழங்கலாம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகர சமூகத்தினர் இந்த வார இறுதியில் குப்பை சேகரிப்பு முகாமை நடத்துகின்றனர்.

மூன்று தனியார் ஏஜென்சிகளின் உதவியுடன், மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள மக்கள், மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள, சிருங்கேரி மடம் சாலையில் உள்ள, சென்னை பள்ளி, டிராப் சென்டரில், வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பொருட்களை கொண்டுவந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

லேசாக கிழிந்த அல்லது கறை படிந்த பழைய ஆடைகள் (துவைத்த), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், டேப்லெட் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் எக்ஸ்ரே தாள்கள், காகிதம், பலகை, பெட்டிகள், பால்பாயிண்ட் பேனாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றை இங்கு வந்து போடலாம்.

இந்த முகாம் மே 13 & 14.ல் நடைபெறுகிறது. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

Verified by ExactMetrics