எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் அருகே நடைபாதையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு.

திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் இன்று புதன்கிழமை காலை கழிவுகளை அகற்றும் தொழிலாளி என்று கூறப்படும் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அவர் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அடிக்கடி செல்வதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

செய்தி, புகைப்படம் – பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics