பருவ மழையின் காரணமாக கோவில் குளங்களில் கணிசமாக உயர்ந்த நீர்மட்டம்

கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் மழைநீர், குழாய் வழியாக குளத்தில் பாய்கிறது. சமீபத்தில் தெருவில் ஓடும் தண்ணீரும் குளத்திற்குள் செல்லும் வகையில் குழாய்கள் பாதிக்கப்பட்டது. இந்த குளத்தின் கிழக்கு பகுதி முழுவதும் இது போன்று சீரமைக்கப்பட்டது.

சமீபத்தில் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து குளம் முழுவதும் காடுகள் போல் வளர்ந்திருந்த தாவரங்களை அகற்றினர்.

ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவில் குளங்களிலும், மயிலாப்பூரில் உள்ள இதர கோவில் குளங்களிலும் தற்போது நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.