நாரத கான சபா வளாகத்தில் உள்ள உட்லண்ட்ஸ் உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள நாரத கான சபா ஆடிட்டோரியத்தின் வளாகத்தில் உள்ள பிரபலமான உட்லண்ட்ஸ் உணவக கவுண்டர், கொரோனாவுக்குப் பிறகு, மீண்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

அதன் ஊழியர்கள் தற்போது எண்ணிக்கையில் குறைவானவர்களே உள்ளனர்.

எனவே இப்போதைக்கு மெனு குறைவாக உள்ளது – காபி மற்றும் டீ தவிர தோசை, கிச்சிடி மற்றும் ஊதப்பம் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்த பிறகு, மேலும் பொருட்கள் உணவு வகைகள் வழங்கப்படும் என்று மேலாளர் கூறுகிறார்.

தற்போது மாலை சுமார் 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

நாரத கான சபாவின் செயலாளர் ஹரிசங்கர், இந்த சபாவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக வருபவர்கள் இந்த உணவகத்தை திறக்க கேட்டதால், உணவு கவுண்டரை மீண்டும் திறக்க உட்லண்ட்ஸ் உரிமையாளர்களிடம் கோரியுள்ளார்.