மயிலாப்பூர் சண்முகப்பிள்ளை தெருவில் பொங்கல் விழா கொண்டாடிய இளைஞர்கள் மற்றும் பெண்கள்.

மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் அமைந்திருக்கும் சண்முக பிள்ளை தெருவில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து அங்கு அமைந்திருக்கும் அம்மன் ஆலயத்தில் எளிமையாகவும் அழகாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடினர்.

அருகில் உள்ள சுந்தர கிராமணி தெருவிலும் அங்கு இருக்கும் ஆண்கள், மூதாட்டிகள் அனைவரும் ஒன்று கூடி அங்கு இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல் இட்டு அங்குள்ள அனைவருக்கும் ஏழை எளியோருக்கும் பகிர்ந்து பொங்கல் திருநாளை சிறப்பித்தனர்.

இங்குள்ள அனைத்து வீடுகளின் வாசலிலும் வண்ண வண்ண கோலம் போட்டிருந்தனர். இங்கு வாழும் எளிய மக்களும் இனிமையாக பொங்கலை கொண்டாடினர்.

Verified by ExactMetrics