மயிலாப்பூர் டைம்ஸ் (Mylapore Times) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ‘Journaling Contest’ அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் எழுதும் போட்டி

மயிலாப்பூரில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்காக, நவம்பர் மாதத்தை முன்னிட்டு ‘அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை (Journaling Contest) மயிலாப்பூர் டைம்ஸ் அறிவித்துள்ளது. இந்த மாதம் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

மாணவர்கள் நான்கு வார காலத்திற்குத் தங்கள் வீட்டில், வசிக்கும் பகுதியில் மற்றும் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் ஒரு சிறு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் போட்டிக்கான புத்தகத்தை மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

சிறந்த நாட்குறிப்புகளை எழுதிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன – https://www.mylaporetimes.com/wp-content/uploads/2026/10/Mylapore-Times-Journaling-contest.webp

Verified by ExactMetrics