ஆழ்வார்பேட்டையில் கேக் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

ஆழ்வார்பேட்டை, பீமன்ன சாலையில் அமைந்துள்ள ‘பஃப்’ (Buff) எனும் ஐஸ்கிரீம் மற்றும் கேக் கடை, சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையைத் தொடர்ந்து மூடப்பட்டது.

இந்தக் கடைக்கு உணவு மற்றும் வணிக உரிமம் (Food and Traders Licence) வழங்கப்படாததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இந்த கடைக்கு சீல் வைத்துள்ளது.

முதன்மை வசிப்பிடமாக உள்ள பகுதியில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தக்கூடாது என்று அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics