ராணி மேரி கல்லூரியின் 108வது ஆண்டு விழா; ஊழியர்கள் மற்றும் ‘பழைய’ மாணவர்கள் சேர்ந்து ஜூலை 14ல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு.

மயிலாப்பூரில் உள்ள இந்த தன்னாட்சிக் கல்லூரியின் 108வது ஆண்டை கொண்டாடும் வகையில் ராணி மேரி கல்லூரியின், ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஜூலை 14 அன்று காலை கல்லூரி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

ஜெய்ப்பூர் பிளாக்கில் உள்ள ராணி மேரி சிலையை சுற்றி காலை 10 மணி முதல் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது. கல்லூரி முதல்வர் பி.உமா மகேஸ்வரி கலந்து கொள்கிறார்.

ஊழியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கம் (SOSA) இந்த நிகழ்வை நடத்துகிறது

Verified by ExactMetrics