125வது ஆண்டில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்: மார்ச் 25 & 26ல் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் ஹரிகதா நிகழ்ச்சி.

ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரும் சுவாமி விவேகானந்தரின் சகோதர சீடருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்களால் 1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னையில் தொடங்கப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள இந்த மடத்தின் 125 ஆண்டு விழா கடந்த சில மாதங்களாக பல வழிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஆன்மீக நிகழ்வுகள் குறித்த தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தலைமையகம் மற்றும் பிற கிளை மையங்களில் இருந்து ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த துறவிகள் விழாக்களில் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்.

மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மற்ற பிரபல பேச்சாளர்கள் மக்களிடம் உரையாற்றுவார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜின் ஆசீர்வாதமும்,விசாக ஹரியின் ஹரிகதா கச்சேரியும் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு மடத்தை தொடர்பு கொள்ளவும் – 249345989

Verified by ExactMetrics