ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மாடித் தோட்டப் பயிலரங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) இணைந்து மார்ச் 19 அன்று ஆர்.ஏ.புரத்தில் ஒரு பயிலரங்கை நடத்தியது.

இது – மொட்டை மாடியில் மற்றும் திறந்த வெளிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து நடத்தப்பட்டது.

தோட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த பயிலரங்கில் கொய்யா, செம்பருத்தி, தக்காளி, கத்தரி, மிளகாய், கருவேப்பிலை ஆகிய மரக்கன்றுகள் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் சங்க தலைவர் டாக்டர் ஆர்.சந்திரசேகரன் வரவேற்றார்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பாலகுமார், க்ரோ பைகளை பயன்படுத்தி மாடி தோட்டம் அமைப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார். ரசாயனம் இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

ஆர் ஏ புரத்தைச் சேர்ந்த கோமதி மற்றும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சாய் பிருந்தா ஆகியோருக்கு டெமோவின் போது உற்சாகமாகப் பேசியதற்காக மரக்கன்றுகளுடன் தலா ஒரு க்ரோ பேக் வழங்கப்பட்டது.

தோட்டக்கலைக் குழுவின் மானியக் கருவிகள், உரம் மற்றும் தோட்டக் கருவிகள் இருப்பு இல்லாததால், மற்றொரு பயிலரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics