உணவகங்களில் கொஞ்ச நாட்களாக வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக பட்டினப்பாக்கம் சங்கீதா உணவகம் சில வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று இந்த உணவகத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட வாடிக்கையாளர்கள் வரவில்லை. இங்கு கூட்டம் எப்பொழுதும் நிறைந்து காணப்படும். அதே நேரத்தில் இங்கு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் நிறைய ஆர்டர்களை பெறுகின்றன.
கொரோனா தொற்றால் மக்கள் உணவகங்களுக்கு நேரிடையாக செல்வதில்லை. எனவே ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தெருக்களில் இருந்து ஆர்டர்கள் வந்தால் ஊழியர்கள் உணவுகளை வீட்டு வாயிலில் (கேட் அருகே) மட்டுமே டெலிவரி செய்வார்கள் என்று தெரிவிக்கின்றனர். நாளை முழு ஊரடங்கு மற்றும் பெரும்பாலான உணவகங்கள் மூடி இருக்கும் என்பதால் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் சங்கீதா உணவகத்தில் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்குகின்றனர்.