மயிலாப்பூரில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கினால் முடங்கிப்போன சாலைகள்.

இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மெரினா கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் உள்ள சந்திப்புகளில் போலீசார் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அவசர தேவை மற்றும் வெளியில் செல்ல அரசு அனுமதி கொடுத்தவர்களை மட்டுமே சாலையில் அனுமதித்தனர். உணவகங்கள், பெட்டிகடைகள் மூடப்பட்டிருந்தது.