இன்று முதல் மயிலாப்பூரில் சுமார் பத்து தொழிலாளர்கள் கோவில்களிலும் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தம் பணியை துவங்கியுள்ளனர். இதன் தொடக்கமாக முதலில் கபாலீஸ்வரர் கோவில் குளத்தின் படிகளையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்தனர். மேலும் வாலீஸ்வரர் கோவிலிலும் இதே போன்று சுத்தம் செய்தனர். இந்த பணி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று கபாலீஸ்வரர் கோவில் நிர்வாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலை ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவும் உடனிருந்தார். மேலும் மயிலாப்பூரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க திட்டம் உள்ளதாக எம்.எல்.ஏ வேலு தெரிவித்துள்ளார்.