மூத்த குடிமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட வலியுறுத்தல்

மயிலாப்பூர் மண்டலத்தில் கோவிட் தொற்று குறைந்து வருகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது இதன் காரணமாக ஒப்பந்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பணியாற்றும் ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் இரத்தக்கொதிப்பு, டயபடீஸ் இருக்கும் மூத்தகுடிமக்களை கட்டாயமாக தடுப்பூசி போட மாநகராட்சி வலியுறுத்துவதாகவும் அதே நேரத்தில் வசதியில்லாதவர்கள் யாராவது இருந்தால் அவர்களை தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர். அடுத்த கொரோனா அலை இதுபோன்ற நோயாளிகளை தாக்க வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.