சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை.
சாந்தோம் குயில் தோட்டம் பகுதியிலிருந்து பட்டினப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. இந்த பகுதியில்தான் மழை பொழிந்தால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். இது தவிர பட்டினப்பாக்கத்திலிருந்து அடையார் பூங்கா (தொல்காப்பிய பூங்கா) வரை நடைபாதையை ஒட்டி மழைநீர் வடிகால் வேலைகளை செய்து வருகின்றனர். இங்கு குறைந்த அளவிலான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் பிஸியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடமும் மற்றும் குடிநீர் வாரியத்திடமும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.