ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த நகரில் மாசுபட்ட குடிநீர் வருகிறது

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இந்த நீரை உட்கொண்ட வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்து அவர்கள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் கசிவு ஏற்பட்டு அது குடிநீர் வழங்கும் குழாயில் கலந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வருட தொடக்கத்தில் ஸ்ரீராம் நகரில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.

Verified by ExactMetrics