கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஓடியது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.

இனிமேல் பக்தர்கள் வழக்கம் போல் ரூ.1501 செலுத்தி கோவில் வளாகத்திற்குள் தங்கத்தேரோட்டம் நடத்தலாம்.