சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரலின் ஒரு பகுதியில் இருக்கும் கொட்டகையில் அன்னை மரியாவின் சிலையை தாங்கிய தேர் நிற்கிறது.
சமீப காலங்களில் மயிலை மாதாவின் திருவிழா நடைபெறும் நாட்களில் அன்னை மரியாவின் தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
கதீட்ரலுக்கு வருகை தரும் சிலர் கொட்டகையில் உள்ள அன்னை மரியாவின் சிலை அருகே சென்று தங்கள் பிரார்த்தனைகளையும் மற்றும் வேண்டுதல்களையும் செய்கிறார்கள். சிலர் மெழுகுவர்த்தியை வழங்குகின்றனர், சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு புடவைகளை வழங்குகின்றனர். தேவாலயத்தில் உள்ள தன்னார்வலர்கள் மேரியின் உருவத்தை அலங்கரித்து, அவருக்கு வழங்கப்படும் புடவையை உடுத்துகின்றனர், இது வேண்டுதல் உள்ள மக்கள் புடவைகளை வழங்கும்போது ஒவ்வொரு முறையும் செய்யப்படுகிறது.
ஒரு கட்டத்தில் புடவைகள் அதிகளவில் காணிக்கையாக குவிந்தது.
கதீட்ரலின் திருச்சபை பாதிரியார் ஏ.அருள்ராஜ் இந்த ஆண்டு தொடக்கத்தில் புடவைகளின் இருப்புகளை குறைத்துவிட முடிவு செய்தார். மேலும் இவ்வாறு வழங்கப்படும் புடவைகள் வீணாகிவிடுவதை அவர் விரும்பவில்லை.
எனவே பாதிரியார் இந்த தேவாலய திருச்சபையின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து ஒரு புடவையை பரிசளிக்கத் தொடங்கினார். இது ஒரு நல்ல புத்தாண்டு பரிசாகவும் அமைந்தது,” என்கிறார் பாதிரியார்.