ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவம்: முக்கிய நிகழ்ச்சிகள் விவரங்கள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளன்று நடைபெறும் பிரபலமான ரிஷப வாகன ஊர்வலம் மார்ச் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணிக்குப் பிறகு தொடங்குகிறது.

சனிக்கிழமை மாலை சுவாமி சந்நிதியில் லக்னப் பத்திரிக்கை வாசிக்கும் போது பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணியன் சிவாச்சாரியார் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரிஷப வாகன ஊர்வலம் நள்ளிரவுக்குப் பிறகு தொடங்கியது நினைவிருக்கலாம்.

மார்ச் 15 ஆம் தேதி தேர் திருவிழா காலை 7.30 மணிக்கு மேல் தொடங்கும், மார்ச் 18 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருகல்யாண உற்சவம் நடைபெறும்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics