சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
கடந்த ஏழு மாதமாக கொரோனா காரணமாக இவரது தொழில் அவ்வளவாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் தங்களுடைய தொழிலை ஆரம்பித்துள்ளார். இப்போது வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அனிதாவும் அவருடைய கணவரும் ஒரு புது ஐடியாவை செய்துள்ளனர். என்னவென்றால் டூமிங் குப்பம், சீனிவாசபுரம் பகுதியில் வசிக்கும் அவருக்கு தெரிந்த ஐந்து மகளிரை அழைத்து வந்து அலங்காரம் செய்தல் மற்றும் கைவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்கள் செய்வது பற்றியும் பயிற்சி கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஐந்து மகளிரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறிய அலங்காரப்பொருட்களை செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருவாய் கிடைக்கிறது. தற்போது அனிதாவும் பிசியாக உள்ளார். உங்களுக்கு இவர்களுடைய அலங்காரங்கள் வேண்டுமென்றால் அனிதாவை 98410 07676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.