இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.

நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சபா தலைவர்கள் அனைவரும் நாரத கான சபாவில் இருந்து இதில் பங்கேற்றனர். சபா தலைவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் பின்னர் துணை குடியரசு தலைவரும் பேசினார். இந்த விழா சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த டிசம்பர் சீசன் விழாவில் சபாக்களின் கூட்டணியின் சார்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும்மேற்பட்ட கச்சேரிகள் (வாய்ப்பாட்டு, நாமசங்கீர்தனம், டிராமா) ஆன்லைனில் ஒளிபரப்பவுள்ளனர். இந்த கச்சேரிகள் அனைத்தும் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்கள் கச்சேரிகளை பணம் செலுத்திய பிறகே ஆன்லைனில் பார்க்க முடியும். பதிவுசெய்யப்பட்ட கச்சேரிகள் அனைத்தும் புதிய கச்சேரிகள். கச்சேரிகள் அனைத்தும் பிரபலமான கலைஞர்களின் கச்சேரிகளே.

Verified by ExactMetrics