மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?

மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான இன்று மயிலாப்பூரில் பெரிய மற்றும் சிறிய தெருக்களில் மக்கள் அவரவர் வீட்டு முன்பு கோலங்கள் போட்டனர். சிலர் ரங்கோலி கோலங்கள் போட்டிருந்தனர். ஆனால் நமது புகைப்பட கலைஞர் வழக்கமாக கோலம் போடும் சில வீடுகளில் இன்று கோலம் போடவில்லை என்று தெரிவிக்கிறார். ஆனால் காரணம் தெரியவில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் பெரிய அளவில் கோலம் போட்டால் உங்களது கோலத்தை புகைப்படம் எடுத்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் மின்னஞ்சல் முகவரி: mytimesedit@gmail.com. நாங்கள் உங்களது கோலம் புகைப்படத்தை சேர்த்து வீடியோவாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை எங்களுடைய யூடியூப் சேனலில் வெளியிடுவோம்.

Verified by ExactMetrics