மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் மார்கழி மாதத்தில் சுமார் நான்கு குழுவினர் மாட வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி செல்வது வழக்கம். இந்த வருடம் கொரோனா காரணமாக சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் பஜனை குழுவினர் மட்டுமே பஜனை பாடல்களை பாடி சென்றனர். இந்த குழுவில் முதியவர்களும் இருப்பார்கள். அந்த வகையில் இன்று பஜனை பாடி சென்ற குழுவில் கோவிட்-19 காரணமாக குறைந்தளவு முதியவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று பஜனை பாடி சென்ற குழுவில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics