உள்ளூர் தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளே நடைபெற உள்ளது.

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல், குடில் போட்டி இன்னும் பல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக நிறைய தேவாலயங்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர். ஆனால் தேவாலய பாதிரியார்கள் இதுபற்றி கூறும் போது, கிறிஸ்துமஸ் அன்று பூசை மற்றும் பாட்டு பாடுதல் நிகழ்வு மட்டுமே நடைபெறும் என்றும் இதில் சிறிய அளவிலான குழுக்கள் மட்டுமே இடம்பெறும் என்றும் தெரிவிக்கின்றனர்.