தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. ஒன்று மந்தைவெளி தெருவிலும் (சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில) மற்றொன்று ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலை இ-சேவை மையத்திற்கு அருகிலும் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு இலவச சேவையாகும். இந்த மினி கிளினிக்கில் காய்ச்சல், தலைவலி, கை கால் வலி, சிறிய அளவிலான காயங்களுக்கு மருந்து போடுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. நோயாளிக்கு கடுமையான பிரச்சினை இருந்தால் இங்குள்ள மருத்துவர் நோயாளிகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கிறார். தற்போதுவரை மயிலாப்பூரில் மூன்று கிளினிக்குகள் செயல்பட்டு வருகிறது.
சனிக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மினி கிளினிக்குகள் திறந்திருக்கும்.