குடியிருப்பாளர்கள் அநாகரிகமாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால் அபராதம்.

மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான பகுதிகளிலும் மூலைகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சி.பி. ராமசாமி சாலையில் மக்கள் தெருவிலேயே குப்பைகளை கொட்டுவதாக உர்பேசர் சுமித் நிறுவன ஊழியர் தெரிவிக்கிறார். பல முறை இதுபற்றி அறிவுறுத்தியும் கேட்பதில்லை என்று தெரிவிக்கிறார்.

அரசு விதிமுறையின் படி திரும்ப திரும்ப தெருவில் குப்பைகளை கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வழிமுறை உள்ளது. தற்போது உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை தெருவில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

மேலும் உர்பேசர் ஊழியர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வருவதாகவும் அவரிகளிடம் குப்பைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Verified by ExactMetrics