எம்.ஆர்.சி நகர் ஐயப்பன் கோவிலில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம். ஆனால் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.

எம்.ஆர்.சி நகரில் பிரபலம் வாய்ந்த ஸ்ரீ அய்யப்பா கோவில் உள்ளது. இங்கு இப்போது சீசனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் வருகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குள் சுமார் ஆயிரம் பேரும் கோவிலுக்கு வெளியே சுமார் ஐந்நூறு பேரும் இருந்தனர்.

கோவிலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. சன்னிதானத்திற்குள் படியேறும் இடத்தில் சுமார் இருபத்தைந்து நபர்களை அனுமதித்தனர். இங்கு வருபவர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தினர். ஆனால் முகக்கவசம் பெரும்பாலும் யாரும் அணியவில்லை.