கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொடுக்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசியை கையாளும் விதத்தில் அனைத்து வசதியுடன் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே கொடுக்கப்படவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நமது பகுதியில் ராயப்பேட்டை மீசாகிப்பேட்டையில், பேகம் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படவுள்ளது. இங்கு நீங்கள் ஒரு அடையாள அட்டையுடன் வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு வார காலத்திற்குள் நெட்ஒர்க் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். மேலும் மயிலாப்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை தடுப்பூசியை வழங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் இதுவரை அலுவலக ரீதியாக அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.