கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆண்டின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இன்று 2020ம் ஆண்டின் பங்குனி திருவிழா கபாலீஸ்வரர் கோவிலில் காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவிலுக்கு வழக்கமாக வரும் சுமார் ஐம்பது பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த பங்குனி திருவிழா கடந்த வருடம் கோவிட் 19 காரணமாக நடைபெறவில்லை. இந்த வருடம் சிறியளவில் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது. இந்த திருவிழா முடிந்தவுடன் சில நாட்களுக்கு பிறகு நடப்பாண்டிற்கான பங்குனி திருவிழா தொடங்கவுள்ளது. மயிலாப்பூர் டைம்ஸின் சமூக வலைதள பக்கத்தில் நடப்பாண்டிற்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளோம்.