மூன்று நாட்கள் நடைபெற்ற ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மூன்று நாட்களாக பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக குளத்தில் நடைபெற்றது. சமீபத்தில் குளத்தில் நீரை சேமிப்பதற்க்காக காஞ்சிபுரத்திலிருந்து களிமண்ணை கொண்டு வந்து நிரப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் பொழிந்த மழையின் போது குளத்தில் இடுப்பளவு தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நீர் தெப்பம் விட போதுமானதாக இருந்தது. இந்த தெப்பத்திருவிழாவில் மக்கள் குறைந்தளவே பங்கேற்றனர்.