கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருட பங்குனி திருவிழா தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி இன்று காலை சிறிய தேர் ஊர்வலமாக கோவிலின் உட்புறத்தில் இழுத்துவரப்பட்டது. இந்த நிகழ்வில் குறைந்தளவு மக்களே சுவாமி தரிசனம் செய்தனர். இது தவிர கோலவிழியம்மன் பால் குட விழாவிற்கு வந்தவர்களும் கலந்து கொண்டனர். நாளை அறுபத்துமூவர் விழாவானது குறிப்பிட்ட நான்கு நாயன்மார்களின் ஊர்வலத்துடன் கோவிலின் உட்புறத்தில் நடைபெறவுள்ளது. இது கடந்த வருடம் நடைபெற வேண்டிய பங்குனி திருவிழாவாகும்.