கோலவிழியம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 பால்குட அபிஷேகம்

இன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி 1008 பால்குடம் ஊர்வலம் கோலவிழியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது. கோலவிழியம்மன் கோவிலில் பால் குட அபிஷேகம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த பால் கூட ஊர்வலம் வழக்கமாக பங்குனி திருவிழாவின் போது நடைபெறும். கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனித்திருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.