கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசு மையங்களை பாராட்டும் பொதுமக்கள்

மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை எளிமையாக உள்ளதாகவும் மேலும் சுமார் அரை மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் பாராட்டுகின்றனர். மேலும் இங்கு பணியிலிருக்கும் செவிலியர்களும் டாக்டர்களும் நல்ல ஒத்துழைப்பு தந்து பணியை சிறப்பாக செய்வதாகவும் தெரிவிக்கின்றனர். நமது மயிலாப்பூர் பகுதிகளில் ஆழ்வார்பேட்டை, கே.பி.தாசன் சாலை, அப்பு தெரு மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி ஆர்.கே.நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.