தேர்தல் 2021: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளருக்கா?

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியிடுவாரா அல்லது பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவாரா என்பது சம்பந்தமாக அதிகாரபூர்வமற்ற பல தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் ஏற்கெனவே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். ஆனால் பா.ஜ.கவினர் தங்களுக்கு மயிலாப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த தொகுதியில் கே.டி.ராகவன் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக அ.தி.மு.க கட்சி தலைமையிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூரவ தகவலும் வெளிவரவில்லை.