மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குறைந்த அளவிலான நாயன்மார்களை மட்டுமே ஊர்வலமாக எடுத்துவந்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநானசம்பந்தர் மற்றும் வாயிலார் ஆகியோரின் சிலைகளே ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊர்வலம் பகல் பன்னிரண்டு மணியளவில் நடைபெற்றது, வெயில் அதிகமாக இருந்ததால் இந்த ஊர்வலத்தில் மக்கள் அவ்வளவாக பங்கேற்கவில்லை. வழக்கமாக அறுபத்து நாயன்மார்களின் விழாவிற்கு மக்கள் திரளாக வந்து பங்கேற்பார்கள். தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் கூட்டம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இந்த பகுதியில் வசிக்கும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics